மது விருந்தில் குத்தாட்டம் போட்ட பெண் பிரதமர்.! - Seithipunal
Seithipunal


பின்லாந்து நாட்டின் பெண் பிரதமராக பதவி வகித்து வருபவர் சன்னா மரீன் (வயது 34). ஆளும் சோவியத் டெமாக்டிரட்டிவ் கட்சியைச் சேர்ந்த இவர் உலகின் இள வயது பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர். சிறந்த பாடகியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையாகி வருகிறது

கடந்த 2020-ம் ஆண்டில் இவர் ஒரு பத்திரிகைக்கு கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவர் இப்படி செய்யலாமா என்ற கண்டன குரல்கள் எழுந்தன. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் அவரை வறுத்தெடுத்தனர்.

 இந்த நிலையில், பிரதமர் சன்னா மரீன் அங்குள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த மது விருந்தில் அவர் கலந்துகொண்டார். இந்த விருந்தில் அவர் தனது நண்பர்களுடன் குத்தாட்டம் போடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 இதை பார்த்த பின்லாந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரதமர் பதவியை அவமதிக்கும் வகையிலும், களங்கத்தை விளைவிக்கும் வகையிலும் இந்தச் செயலில் ஈடுபடுவதா என அவர்கள் கேள்வி எழுப்பினர். சமூக வலைதளங்களிலும் தங்கள் எதிர்ப்பு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Finland prime minister sanna merin dance in night club


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->