வாஷிங்டனில் முகாமிட்டுள்ளதாக ஐரோப்பிய தலைவர்கள்: புடின் -ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையின் முடிவு எதுவாக இருக்கும்..? ரஷ்யா உடன் சமரசம் செய்து, உக்ரைனுக்கு ட்ரம்ப் அழுத்தம் கொடுப்பாரா..? - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் சந்தித்து கலந்துரையாடினர்.  ஆனால், இந்த பேச்சுவார்த்தை, உக்ரைனில் போர் நிறுத்தம் குறித்து எந்தவொரு தீர்வையும் எட்டாமல் தோல்வியில் முடிவடைந்ததது.  இருப்பினும், உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரவேற்றுள்ள நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு உத்தரவாதங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்து ரஷ்ய அதிபரின் கருத்துக்களை விட அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவது எனக்கு மிகவும் முக்கியமானது என்றும், ஏனெனில், ரஷ்ய அதிபர் எந்த உத்தரவாதத்தையும் வழங்க மாட்டார் எனவும், இருந்தாலும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான அமெரிக்காவின் முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 18) வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் புடின், ஜெலன்ஸ்கியுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் கலந்துக்கொள்கின்றனர்.

இதில், இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ஜெர்மனி பிரதமர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி மற்றும் பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனும் பேசவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘நேட்டோ’ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்கின்றனர். இதில் கடந்த காலங்களில் ஜெலன்ஸ்கிக்கு ஏற்பட்ட அவமானத்தை மீண்டும் அவர் சந்திக்க கூடாது என்பதற்காகவும், ரஷ்யாவுடனான அமைதி ஒப்பந்தப் போரில் டிரம்பின் அழுத்தத்திற்கு அடிபணிந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே ஐரோப்பிய தலைவர்கள் வாஷிங்டனில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், இதுவரை இல்லாத வகையில் அவர்கள் உக்ரைனுக்கு ஆதரவைத் தெரிவிக்க வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதினின் ஒருதலைப்பட்ச திட்டத்தை அதிபர் டிரம்ப் ஆதரிக்கக்கூடும் என்ற சமிக்ஞைகள் வெளியாகியுள்ளன. 

இதனால், ரஷ்யாவால் இதுவரை கைப்பற்ற முடியாத பகுதிகளை, உக்ரைன் நிரந்தரமாக விட்டுக்கொடுப்பதும் டிரம்பின் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், இறுதி ஒப்பந்தம் ஏற்படும் வரை போர் நிறுத்தம் செல்லாது என்பதும் புதினின் திட்டமாக உள்ளது. இந்நிலையில், உக்ரைனின் ஒருமைப்பாட்டிற்கான தங்கள் ஆதரவை ஐரோப்பிய தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஒருவேளை ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரைனுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கத் தயாராக உள்ளது என்பது குறித்தும் அவர்கள் தெளிவு கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், உக்ரைனின் புதிய பகுதிகளை ரஷ்யா பெற்றால், எதிர்கால தாக்குதலுக்கு அதை ஏவுதளமாகப் பயன்படுத்தும் என்றும் ஐரோப்பிய நாடுகள் அஞ்சுகின்றன. எனவே இன்றைய தலைவர்களின் சந்திப்பு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருமா..? அல்லது டிரம்ப் கொடுக்கும் அழுத்தம் அம்பலமாகுமா..? என்பது வெட்ட வெளிச்சமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

European leaders to attend Putin and Zelensky talks


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->