உக்ரைனுக்கு கூடுதலாக 7.9 பில்லியன் டாலர் நிதி உதவி.! ஐரோப்பிய ஒன்றியம் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையான போர் 6 மாதங்களாக நடந்து வரும் நிலையில் உக்ரைனின் கிழக்கு மாகாணங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள் தற்போது மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை தொடர்ந்து தாக்கி வருகின்றன.

மேலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் பண உதவிகளை வழங்கி உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி வருகின்றன.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு பல்வேறு துறைகளுக்காக 7.9 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் ஜோசப் பொரேல் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியில் பட்ஜெட் ஆதரவு, ராணுவம், மனிதாபிமான உதவிகள், உள் கட்டமைப்பு, சுகாதார பராமரிப்பு மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசரகால உதவி தொகுப்புகள் என்று துறைவாரியாக பிரித்து நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை உக்ரைனுக்கு 9.4 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EU to provide additional 7 billion in financial aid to Ukraine


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->