டிவிட்டரில் கருத்து சுதந்திரம் என்பது என்ன தெரியுமா? எலான் மஸ்க் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் டிவிட்டர் வலைத்தளம் பிரபலமானது. இதில், உள்ளூர் பிரபலங்கள் முதல் உலக பிரபலங்கள் வரை டிவிட்டரில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், டிவிட்டரில் கருத்து சுதந்திரம் குறித்து உலகின் முன்னணி கோடீஸ்வரரும், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் கேள்வி எழுப்பி உள்ளார். 

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "நான் கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் கொண்டுள்ளனர். நான் கருத்து சுதந்திரம் என குறிப்பிடுவது, அந்நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சுதந்திரத்தை தான். 

ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்களை பரப்புவதற்கு என்றும் எதிரானவன் நான். ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது அந்நாட்டு மக்களின் விருப்பதிற்கு எதிராக செயல்படுவது என்று கருதுபவன் நான்" என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

டிவிட்டரின் 100 சதவீத பங்குகளையும் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்கிடம் டிவிட்டர் நிறுவனம் விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elon Musk Explain Free Speech Simply Mean


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->