அருவருப்பான செயல்…மலேசியாவில் அதிர்ச்சி தீர்ப்பு...! 2 மகள்களை வன்கொடுமை செய்த தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை..!
disgusting act Shocking verdict Malaysia Father sentenced 104 years prison for abusing 2 daughters
மலேசியாவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்றில், தனது இரண்டு வளர்ப்பு மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 35 வயது நபருக்கு நீதிமன்றம் 104 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் 18 பிரம்படி தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த விசாரணையில் தெரியவந்ததாவது,"குற்றவாளி, 15 மற்றும் 16 வயதுடைய தனது வளர்ப்பு மகள்களை 2020 முதல் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மன உளைச்சலுடன் இருந்த சிறுமிகள் சமீபத்தில் தங்கள் தாயிடம் உண்மையை வெளிப்படுத்தியதும், தாய் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.
அதன் பின்னர் கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் போது நீதிபதி, குழந்தைகளின் வாழ்க்கையை சிதைத்த குற்றவாளி “மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்” என்று கண்டனம் தெரிவித்தார்.
அதையடுத்து, அந்த நபருக்கு மொத்தம் 104 ஆண்டுகள் சிறை மற்றும் 18 முறை பிரம்படி தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது.இந்த தீர்ப்பு மலேசியா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
disgusting act Shocking verdict Malaysia Father sentenced 104 years prison for abusing 2 daughters