பயங்கர நிலச்சரிவு - 50 பேர் பலி.! மீட்பு பணிகள் தீவிரம்.! - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்கா நாடான ஈக்வடாரில் மார்ச் 26ஆம் தேதி சிம்போராசோ மாகாணத்தில் உள்ள அலாசி நகரத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகல் பாராமல் மண்ணில் புதைந்துள்ள வீடுகளிலிருந்து மக்களை மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக இருந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளதாக ஈக்வடார் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அலுவலகம் வெளியிட்ட தகவலில், நிலச்சரிவினால் 60 வீடுகள் முற்றிலும் அழிந்துள்ளதாகவும், 150 வீடுகள் பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll rises to 50 in landslide in ecuador


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->