பள்ளி வளாகத்தில் மரண ஓலம்...! சரமாரியாகப் பாய்ந்த தோட்டாக்கள்...! பிலிப்பைன்ஸ் நாட்டில் 3 மாணவர்கள் பலி, 5 பேர் படுகாயம்...! - Seithipunal
Seithipunal


பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளிக்கூட வளாகத்திலேயே நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள தக்லோபன் நகரில் சான் ஜோஸ் நேஷனல் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

வழக்கம்போல் இன்று காலை பள்ளி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், 2 மர்ம நபர்கள் திடீரென பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

எதிர்பாராத இந்த தாக்குதலால் பள்ளி வளாகம் முழுவதும் பதற்றமும் பரபரப்பும் சூழ்ந்தது. மாணவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், ஆசிரியர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 2 பேரை காவலர்கள் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பக்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது தெரியவந்துள்ளது.மேலும், தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் ஆண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூரச் செயலுக்கான பின்னணி மற்றும் காரணம் குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

death rattle school compound barrage bullets 3 students killed 5 seriously injured Philippines


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->