மக்களே உஷார்...! இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை...! - வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த வளிமண்டல மாற்றத்தின் தாக்கத்தால் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேலும், மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், திடீர் மழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heavy rains going lash 5 districts Tamil Nadu today Meteorological Department report


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->