உளவு பார்த்தவருக்கு மரண தண்டனை.. ஈரான் அதிரடி!  - Seithipunal
Seithipunal


இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஒருவருக்கு  ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியது.முன்னதாக, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கடந்த 4ம் தேதி 6 பேருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜுன் மாதம் மோதல் மூண்டது.அப்போது  12 நாட்கள் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள்  உயிரிழந்தனர்.

இதனிடையே, இந்த மோதலுக்குப்பின் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக தங்கள் நாட்டை சேர்ந்த பலரையும் ஈரான் கைது செய்து வருகிறது. அந்தவகையில் கைது செய்யப்படும் நபர்களுக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றி வருகிறது.

இந்நிலையில், ஈரானின் கியூம் நகரை சேர்ந்த அந்த நபர் 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மொசாட்டிற்கு உளவு பார்த்தது உறுதியானதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த நபருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நபரின் பெயர், வயது உள்ளிட்ட எந்த விவரத்தையும் ஈரான் வெளியிடவில்லை.

முன்னதாக, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கடந்த 4ம் தேதி 6 பேருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 6 பேருக்கு ஈரான் மரண தண்டனை  நிறைவேற்ற 6 பேரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், இஸ்ரேலுக்கு உளவு தகவல்களை கொடுத்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Death penalty for the spy Iran strikes


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?


செய்திகள்



Seithipunal
--> -->