வரும்காலங்களில் சைக்கிள்களுக்கு மிகப்பெரிய டிமாண்ட்.! பவர் பாதையை கண்டறிந்த கட்டிடப்பொறியாளர்.!  - Seithipunal
Seithipunal


தற்போது சுவிட்சர்லாந்திலும், துபாயிலும் ஆற்றல் தரும் சைக்கிள் பாதை பரிசோதனையில் உள்ளது. 

இன்னும் சில வருடங்களில், சைக்கிள் ஒரு முக்கிய நகர போக்குவரத்து வாகனமாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே, அப்போது இதற்கு பிரத்யேக சாலைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படக்கூடும்.

அந்த நிலை ஏற்பட்டால், ஜெர்மனியை சேர்ந்த கட்டிடக்கலைஞர் பீட்டர் குசியாவின், 'சோலார் வெலோரூட்' மிகவும் பிரபலமாகி விடும். சைக்கிள் ஓட்டும் நபர்களை மழை, வெயில், சூறாவளிக் காற்றிலிருந்து காக்க, இந்த பாதையில் வளைந்த கூரை அமைக்கப்பட்டுள்ளது. 

இதிலேயே சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பலகைகள்.அமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் சிறப்புப் பாதை, ஒரு கி.மீ.,க்கு 2,000 எம்..டபிள்யு.எச்., அளவிற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யகைகூடும் என்று அவர் தெரிவிக்கின்றார். 

இரவு நேரங்களில் இந்த பாதையில் நல்ல வெளிச்சம் தரும் விளக்குகள் இருக்கும். இதனால் இரவில் பாதசாரிகளும் இந்த பாதையை பயன்படுத்தக்கூடும் வழியெல்லாம் மொபைல் சார்ஜர் வசதி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cycle route in swizz


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->