போரில் 70,000 வீரர்களை இழந்த ரஷ்யா - சர்வதேச ஆய்வு மையம் அறிக்கை - Seithipunal
Seithipunal


உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர் ஓராண்டிற்கும் மேலாக நடந்து வரும் நிலையில், இரு நாடுகளிலும் போரினால் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் போர் தொடர்பாக சர்வதேச அணுகுமுறை மற்றும் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் போரில் ரஷ்யா தனது 70,000 வீரர்களை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

இரண்டாம் உலகப்போருக்கு பின் அதிகபட்ச ராணுவ வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாகவும், ரஷ்யவீரர்களின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகள் நடத்திய போரை விட 35 சதவீதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து போரில் உக்ரைன் வீரர்களின் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை விட ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகம் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் ரஷ்யா அதிகாரிகளின் நேர்த்தியில்லா திட்டம் மற்றும் முறையற்ற அணுகுமுறையால் படை வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Csis report says Russia losts 70000 soldiers in ukraine war


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->