நாக்கு வறண்டு இறந்து கிடந்த காதல் ஜோடிகள்...! பாகிஸ்தானில் இருந்து தப்பி வந்ததாக ஐயம்...!
couple who died of dry tongues It is suspected that they had escaped from Pakistan
பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் ஜோடி, தண்ணீரின்றி நாக்கு வறண்டு பலியான சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் சர்வதேச எல்லையிலிருந்து 11 கி.மீ. தூரத்திற்கு முன்பாக இருவருடைய சடலங்கள் கிடந்துள்ளது.

அங்கு ஆடு, மாடு மேய்க்கும் நபர்கள் இதுகுறித்து எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர்.அச்சமயம் இறந்து கிடந்தது ரவிக்குமார் (வயது 17) மற்றும் ஷாந்தி பாய் (வயது 15) எனத் தெரியவந்துள்ளது.அங்கு அவர்களுடன் பாகிஸ்தானின் செல்போன் சிம்கார்டு வைத்துள்ளனர்.
இதன் மூலம் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டுபிடித்துள்ளனர்.அந்த சடலங்கள் கிடந்த இடத்தில் வாட்டர் கேன் கிடந்துள்ளது. இதனால் தண்ணீர் முடிவடைந்து, நாக்கு வறண்டு நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டு இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர்.
அந்த பெண் கையில் சிகப்பு, வெள்ளை வளையல்கள் கிடந்துள்ளது. திருமணம் முடிந்தவர்கள் இதுபோன்று வளையல்கள் அணிவார்கள் என்பதால், அண்மையில் திருமணம் ஆகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
English Summary
couple who died of dry tongues It is suspected that they had escaped from Pakistan