திட்டமிட்டு வைரஸை உருவாக்கி, கொரோனாவை பரப்பிய சீனா.. அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த பெண் ஆராய்ச்சியாளர் பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


ஹாங்காங் பொது சுகாதாரத்துறை அமைப்பில் வைராலஜி நிபுணராக பணியாற்றியவர் மருத்துவர் லீ மெங். இவரை சீன அரசு மிகவும் மிரட்டியுள்ளது. மேலும், சீனாதான் கொரோனா வைரஸை பரவ விட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

இப்போது அவர் அமெரிக்காவில் தலைமறைவாக இருக்கும் நிலையில், செப்டம்பர் 11 ஆம் தேதி அடையாளம் தெரியாத பகுதியிலிருந்து பிரிட்டன் லூஸ் மோன் என்ற நிகழ்ச்சியில் பேட்டியளித்தார். இந்த பேட்டியில் பல அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்துள்ளார். 

கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் சீனாவில் பரவி வந்த நிமோனியா வைரஸ் தொடர்பாக இரண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட நிலையில், மோசமான முடிவுகள் தெரியவந்தது. இது குறித்து மேலதிகாரியிடம் பகிர்ந்து கொண்ட நிலையில், அந்த மேலதிகாரி உலக சுகாதார மையத்தின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். அவர் சீன அரசு சார்பாகவும், உலக சுகாதார மையம் சார்பாகவும் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், " வாயைப் பொத்திக் கொண்டு இரு.. இல்லை என்றால் காணாமல் போய்விடுவாய் " என்று மிரட்டினார். 

அந்த சமயத்தில், சீன புத்தாண்டு விடுமுறை துவங்கியதை அடுத்து, சீன மக்கள் அதிகளவில் பயணம் செய்வார்கள். இதனால் கொரோனா பரவும் என்று எச்சரித்த நிலையில், இதனை அரசு கேட்கவில்லை. என் மனது அமைதியாக இருக்க வில்லை. அதனால் உலக மக்களுக்கு உண்மையை கூறும் பொருட்டும், மிரட்டல் காரணமாகவும் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தேன் என்று தெரிவித்தார். மேலும், சீனாவில் உள்ள ஆராய்ச்சி மையத்திலேயே கொரோனா உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Spread corona virus to world


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal