ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1.30 லட்சம்! சீன மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்!
China population issue New born baby offer
சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவது மக்கள்தொகை சரிவுக்கு வழிவகுத்துள்ளது. இதைத் தடுக்க அரசு பல முயற்சிகளை எடுத்தும், பிறப்புவிகிதம் பெரிதாக உயரவில்லை.
இந்த சூழலில், பிறப்புகளை ஊக்குவிக்க புதிய நிதியுதவி திட்டத்தை சீன அரசு அறிவித்துள்ளது. அதன் கீழ், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 3,600 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,000) மானியம் வழங்கப்படும்.
இந்த உதவி குழந்தை 3 வயதுக்கு வரும் வரை, வருடம் ஒருமுறை வழங்கப்படும். எனவே, ஒரு குழந்தைக்கான மொத்த மானியம் சுமார் ரூ.1.30 லட்சமாகும்.
மேலும், 2022 முதல் 2024 வரையிலான காலத்தில் பிறந்த குழந்தைகளை கொண்ட பெற்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் வருடத்திற்கு 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் என கணிக்கப்படுகிறது.
குழந்தையை வளர்க்கும் செலவுகளை குறைக்கும் இந்த முயற்சி, இளம் தம்பதிகளின் கருவுறும் குறித்த எண்ணங்களை மாறச் செய்யும் என்று சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரு குழந்தைக் கொள்கையை சீனா 10 ஆண்டுகளுக்கு முன்பே நீக்கியிருந்தாலும், மக்கள்தொகை சரிவு இன்னும் தொடர்வதால், இத்தகைய திட்டங்கள் அவசியமாகி உள்ளன.
English Summary
China population issue New born baby offer