கில்ஜிட் - பல்திஸ்தான் விவகாரத்தில், ஆலோசனை என்ற பெயரில் மூக்கை நுழைக்கும் சீனா..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியான கில்ஜிட் - பல்திஸ்தான் மாகாணத்தின் அந்தஸ்தை பாகிஸ்தான் வழங்கி வருகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நடவடிக்கைக்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. 

மேலும், சட்டவிரோதமாக, வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், பாகிஸ்தானின் நடவடிக்கையை சீனா கவனித்து வருவதாக தெரிவித்து சர்ச்சையை எழுப்பியுள்ளது. 

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் பேசுகையில், " கில்ஜிட் - பல்திஸ்தான் விவகாரத்திலும், காஷ்மீர் நிலவரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக, நிலையாக உள்ளது. இந்த பிரச்சனை நீண்ட வருடமாக நடைபெற்று வந்தாலும், அமைதியான முறையில் ஐ.நா ஒப்பந்தம் மூலமாக இதனை தீர்க்க வேண்டும் " என்று தெரிவித்துள்ளது. 

உள்நாட்டு விவகாரத்தில் பாகிஸ்தான் அத்துமீறி எல்லையை ஆக்கிரமித்து அராஜகம் செய்து வரும் நிலையில், அனைத்தையும் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாத நபரை போல சீனா செயல்பட்டு வருவது ஏற்கவனே பலமுறை இந்தியாவால் எச்சரிக்கப்பட்டது. ஆனால், சீனா தொடர்ந்து அதனை மீறி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China gives Advice to India and Pakistan


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal