டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பதவியில் மாற்றம்..? எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அறிக்கை..! - Seithipunal
Seithipunal


உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவராக உள்ளார். அத்துடன், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதனை 'எக்ஸ்' என பெயர் மாற்றம் செய்துள்ளார்.

அமெரிக்க அதிபராகடொனால்ட் டிரம்ப் 02-வதாக பதவியேற்றத்தில் இருந்து அவருடைய அரசில் சிறந்த நிர்வாகத்திற்கான குழு (Dodge) தலைவராகவும் உள்ளார். தற்போது அவர் இதில் அதிக கவனம் செலுத்தி வருவதால் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க நாளிதழ் ஒன்று, டெஸ்லா நிறுவனத்தின் நிர்வாக குழுவினர், எலான் மஸ்க்கிற்கு பதில், புதிய சி.இ.ஓ.,வை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என செய்தி வெளியிட்டு இருந்தது. இவ்வாறு டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., பதவியில் இருந்து தன்னை மாற்ற முயற்சி நடப்பதாக வெளியான தகவலை எலான் மஸ்க் மறுத்துள்ளார்.

அத்துடன், இதற்கு மறுப்பு தெரிவித்து டெஸ்லா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டெஸ்லா நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஓ., நியமிக்க நிர்வாக குழு முடிவு செய்துள்ளதாக மீடியாக்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது தவறான செய்தி. அந்த தகவல் வெளியிடப்படுவதற்கு முன்னரே, இந்த விளக்கத்தை கொடுத்துவிட்டோம். நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆக எலான் மஸ்க் தொடர்கிறார். அவர் மீது நிர்வாக குழுவினர் முழு நம்பிக்கை வைத்து உள்ளனர் என தெரிவித்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து எலான் மஸ்க் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரக்க நாளிதழ் செய்தியில் துளியும் உண்மை இல்லை. ஒரு தவறான கட்டுரையை வெளியிடுவதும், டெஸ்லா இயக்குநர்கள் குழுவால் முன்கூட்டியே தரப்பட்ட ஒரு தெளிவான மறுப்பைச் சேர்க்க தவறுவதும் மிகவும் மோசமான நெறிமுறை மீறல் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Change in the position of Tesla chairman


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->