சந்திரயான்-2 விண்கலம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் நாசா வெளியிட்ட வாழ்த்து கூறியது.! - Seithipunal
Seithipunal


நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இந்த சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வந்தன. 

சந்திரயான்-2 விண்கலம் வெற்றகரமாக ஏவப்பட்டது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சோதனைகளை முறியடித்து சந்திரயான்-2 விண்ணில் பறந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 2 கால் பதிக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது எனவும் கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக உழைத்தனர். அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து விண்வெளியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது இஸ்ரோ அமெரிக்காவின் ஆய்வு மையமான நாசா இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் நிலவின் தென் பகுதியில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆய்வு பணியை அறிய நாங்களும் ஆர்வமாக உள்ளோம் என நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chandirayaan-2 appreciate NASA


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal