காலிஸ்தான் விவகாரம் | பழி சுமத்த முயற்சிக்கவில்லை! இந்தியாவின் அதிரடிக்கு பணிந்தது கனடா! - Seithipunal
Seithipunal


காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்ஜிப் நிஜ்ஜர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் படுகொலை செய்யப்பட்டார். நிஜ்ஜர் படுகொலையில் இந்தியாவைச் சேர்ந்த உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியது. இந்த நிலையில் நேற்று கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து மூத்த அதிகாரியை வெளியேறுமாறு கனடா அரசு உத்தரவிட்டது.

இதற்கு டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அழைத்த மத்திய அரசு கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு கனடா தூதரக அதிகாரி ஒருவரை 5 நாட்களுக்குள் இந்தியா விட்டு வெளியேறுமாறும் மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் இருநாட்டு உறவுகளுக்கும் இடையே ஒரு சிலை ஏற்படுத்தி உள்ள நிலையில். கன்னடா பிரதமர் இன்று அந்நாட்டு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவரின் கொலையில் இந்திய முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி இந்தியா மீது பழியை சுமத்த கனடா முயற்சிக்கவில்லை. ஆனால் புதுடெல்லியில் இருந்து தூதரக அதிகாரி வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டு உள்ள பிரச்சினையை சரியாகக் கையாள விரும்புகிறோம்.

இந்திய அரசு இந்த விவகாரத்தை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். நாங்களும் அதையே செய்ய விரும்புகிறோம். இந்த விவகாரத்தை வைத்து பிரச்சனையை தூண்டிவிடவோ அல்லது அதிகரிக்கவோ பார்க்கவில்லை" என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளதாக கனடா ஊடகங்கள் செய்து வெளிப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Canada explains not trying blame India in khalistan separatist murder


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->