உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை புரிந்த ஜஸ்பிரித் பும்ரா!
Bumrah new record
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில், பும்ரா தனது சிறப்பான பந்துவீச்சால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டி சாதனை புரிந்துள்ளார்.
இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 4 விக்கெட்களை எடுத்து, 200 விக்கெட்டுகள் எனும் சாதனையை எட்டினார்.
பும்ரா, 200 விக்கெட்டுகளை 19.56 எனும் சிறந்த சராசரியுடன் கைப்பற்றியுள்ளார், இது கிரிக்கெட் வரலாற்றில் யாரும் எட்டாத சாதனை.
இதன் மூலம் மால்கோம் மார்ஷல், ஜோயல் கார்னர் மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் ஆகிய பிரபல பந்துவீச்சாளர்களை தனது சராசரியால் முந்தியுள்ளார்.
மால்கோம் மார்ஷல் (20.9),
ஜோயல் கார்னர் (21.0),
கர்ட்லி ஆம்ப்ரோஸ் (21.0) ஆகியோரின் சாதனைகளை மிஞ்சிய பும்ரா 19.56 சராசரியுடன் 200 விக்கெட்களை வீழ்த்தி சிறந்த பந்துவீச்சாளர் என சாதனை படைத்துள்ளார்.