திடீரென பற்றியெரிந்த தண்ணீர் பூங்கா: 16 பேர் காயம்! பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


வட ஐரோப்பியா, ஸ்வீடனின் மேற்கு கடற்கரையோரம் பகுதியில் புதிய தண்ணீர் பூங்கா கட்டப்பட்டு வந்தது. நேற்று திடீரென தண்ணீர் பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டது. 

 பூங்கா முழுவதும் பயன்பாட்டிற்கு வராத நிலையில் நீர் சறுக்கு அமைப்புகள் தீயில் எரிந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. 

இந்த தீ விபத்தில் 16 பேர் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த தீ விபத்தினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை தீ விபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை. 

மேலும் தீயை முழுமையாக அணைக்கும் வரை அருகில் இருப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கு மாறும் ஜன்னல்கள் கதவுகளை பூட்டி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் புகையால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் வெளியில் யாரும் வர வேண்டாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

big blaze water park fire accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->