ஆன்மீகத் திரைக்குப் பின்னால் ‘போதை’ உலகம்! இலங்கையில் 22 புத்த பிட்சுகள் அதிரடி கைது...! - ரூ.100 கோடி சரக்கு பறிமுதல்! - Seithipunal
Seithipunal


தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து இலங்கையின் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த 22 புத்த துறவிகளைச் சுற்றி வெடித்த பரபரப்பான சம்பவம், விமான நிலைய வரலாற்றிலேயே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெளிப்படையாக ஆன்மிக உடையணிந்திருந்த இந்த குழுவினரிடம் இருந்து, மறைமுகமாக கொண்டு வரப்பட்டிருந்த பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ரூ.110 கோடி மதிப்பிலான சுமார் 110 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் சூட்கேஸ்களின் அடிப்பகுதியில் மிக நுட்பமாக மறைத்து, 5 கிலோவுக்கும் அதிகமான அளவில் போதைப்பொருட்களை எடுத்துச்சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்கூட்டியே கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனை மேற்கொண்ட போது இந்த அதிர்ச்சிகரமான கடத்தல் முயற்சி அம்பலமானது.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய போதைப்பொருள் பறிமுதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதுடன், துறவிகள் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருட்களுடன் சிக்கிய முதல் வழக்காகவும் இது கருதப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் புத்த துறவிகள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள் என்ற அடையாளத்தில் இருந்ததாக கூறப்படும் இந்த சந்தேக நபர்கள், மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Behind spiritual curtain world drugs 22 Buddhist bitches arrested Sri Lanka Goods worth 100 crore seized


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->