விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய ராணுவ ஹெலிகாப்டர் - கருப்பு பெட்டி மீட்பு! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா குயீன்ஸ்லாந்து பகுதி அருகே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கடந்த மாதம் கடலில் விழுந்து நொறுங்கியது. தற்போது அதிலிருந்து கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஏலிகாப்டர் கடந்த மாதம் விபத்துக்குள்ளான கடல் பகுதிகளில் தேடுதல் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் கருப்பு பேட்டி நேற்று முன்தினம் நீர்மூழ்கி வீரர்களால் மீட்கப்பட்டது. அந்த கருப்பு பெட்டி, ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதன் காரணத்தை தெரிந்து கொள்வதற்கான விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியா ஹெலிகாப்டர்களில் ஒன்று அமெரிக்காவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதும் கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு கடல் பரப்பில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

இதனை அடுத்து அந்த ஹெலிகாப்டர் உடன் பயிற்சியில் இருந்த மற்றொரு ஹெலிகாப்டர் தேர்தல் பணியில் ஈடுபட்டது. இதில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரின் சிதறல்கள் கண்டறியப்பட்டன. மேலும் ஹெலிகாப்டரில் இருந்த 4பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australian military helicopter black box rescue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->