குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை! அதிரடி முடிவை அறிவித்த பிரதமர்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. 

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கை வீட்டுக்கு வெளியே கழித்து வந்தனர்.

மேலும் வீட்டில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள், உறவினர்கள் இடையேயான உரையாடல், இணக்கம் அதிகமாக இருந்தது. ஆனால், 2010 ஆண்டு காலத்தில் செல்போன் மூலம் இணைய சேவை தொடங்கப்பட்டது முதல் இது குறைய தொடங்கிவிட்டது.

குறிப்பாக குழந்தைகளின் விளையாட்டு ஆர்வம் குறைந்து வருகிறது. மேலும் அவர்களின் கவனச் சிதறல் காரணமாக கல்வியில் நாட்டமும் குறைந்து, சிறு வயதிலேயே மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்ய அந்நாட்டு பிரதமர் முடிவு செய்துள்ளார். 

இது குறித்து பிரதமர் தெரிவிக்கையில், செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து குழந்தைகளை விலக்கி, அவர்களை விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்கள், டென்னிஸ் மைதானங்களில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம். 

உண்மையான சக மனிதர்களுடன் அவர்களின் அனுபவங்களை  குழந்தைகள் பெற வேண்டியதை நாங்கள் விரும்புகின்றோம். சமூக ஊடகங்கள் தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது. 

சில கருத்துக்கள், சில தகவல்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை தாக்குகின்றன. இது மிக கவலை அளிக்க கூடிய ஒன்று. எனவே சமூக ஊடகங்களை குழந்தைகள் பயன்படுத்துவதற்கு தடை செய்யும் சட்டத்தை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 

இந்த தடை எந்த வயது குழந்தைகளுக்கு என்பது குறித்து சோதனை விரைவில் தொடங்கப்படும் என்று ஆஸ்திரேலியா நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Australia ban Social media Child


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->