7 மாடி அடுக்கு கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் - அதிஷ்டவசமாக உயிர் பிழைப்பு! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரத்தில் இருக்கும் 7 மாடி அடுக்கு கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த பெண் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

டோமினி ரெய்ட் என்ற பெண், கடந்த ஜூலை 29-ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் தனது வீட்டின் 7-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். 

சுமார் 21 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

மருத்துவமனையில் அவருக்கு ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட நிலையில், பலத்த காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகளுடன் உயிர் பிழைத்துள்ள ரெய்ட், தற்போது மருத்துவமனையில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இது குறித்து அவரது தந்தை பிராட் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ''வாரம் முழுவதும் தொடர்ந்து நடந்த அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் அதிஷ்டவசமாக ரெய்ட் உயிர் பிழைத்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். 

இந்த விபத்துக்கான காரணம் குறித்த எந்த விவரங்களும் தெரியவில்லை. இது குறித்து ரெய்ட் பேசத் தொடங்கிய பிறகு தான் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், சிகிச்சை செலவுக்கு அதிக பணம் தேவைப்படுவதால் கிரவுட் ஃபண்டிங் முறையில் பொதுமக்களிடம் அவரது பெற்றோர் உதவி கேட்டிருந்தனர். இதன் மூலம் இதுவரை ரெய்டின் ரூ.26 லட்சம் சிகிச்சைக்கு கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia 7 storey building woman falls


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->