2026 ஆசிய விளையாட்டு: வில்வித்தை, குத்துச்சண்டையில் இந்தியாவுக்குத் தங்க மழை - தென்கொரியாவை வீழ்த்திப் பெண்கள் வில்வித்தை அணி சாதனை!
Asian Games 2026 India Bags Multiple Golds in Archery and Boxing Ankush Panghal Parveen Hooda Womens Archery Team Triumph
ஜப்பானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய வீரர்-வீராங்கனைகள் தொடர்ந்து அபார திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
வில்வித்தையில் வரலாற்றுத் தங்கம்:
இன்று நடைபெற்ற பெண்கள் ரிகர்வ் வில்வித்தை இறுதிப்போட்டியில், இந்திய அணி வலுவான தென்கொரிய அணியை எதிர்கொண்டது. இதில் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியப் பெண்கள் அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது. மேலும், இன்றைய போட்டிகளில் வில்வித்தையில் இந்தியாவுக்கு கூடுதல் 2 வெள்ளிப் பதக்கங்களும் கிடைத்துள்ளன.
குத்துச்சண்டையில் 3 தங்கப் பதக்கங்கள்:
குத்துச்சண்டைப் போட்டிகளில் இந்திய அணித் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது:
அன்குஷ் பங்கால்: ஆண்கள் 80 கிலோ எடைப்பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீரர் அன்குஷ் பங்கால் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மகளிர் அணி: ஏற்கனவே மகளிர் 75 கிலோ எடைப்பிரிவில் லவ்லினா போர்கோஹெய்ன் தங்கப் பதக்கமும், 65 கிலோ எடைப்பிரிவில் பர்வீனா ஹூடா தங்கப் பதக்கமும் வென்றனர்.
இதன் மூலம் இத்தொடரின் குத்துச்சண்டைப் போட்டிகளில் மட்டும் இந்திய அணி 3 தங்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செபக்டக்ராவில் வெண்கலம்:
இவற்றுடன், செபக்டக்ரா (Sepak Takraw) ஆண்கள் குவாட்ரண்ட் பிரிவில் களமிறங்கிய இந்திய அணி திறம்பட விளையாடி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
English Summary
Asian Games 2026 India Bags Multiple Golds in Archery and Boxing Ankush Panghal Parveen Hooda Womens Archery Team Triumph