செல்லை பறிகொடுத்த செய்தியாளர்.. மீட்டுக்கொடுத்த மக்கள்..! - Seithipunal
Seithipunal


அர்ஜென்டினா நாட்டில் இயங்கி வரும் என் விவோ எல் நோயெவ் தொலைக்காட்சி நிலையத்தில் நிருபராக டீகோ டிமார்க்கோ என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சிராந்தி நகரில் நேரலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தன்னை தயார்படுத்திக்கொண்டு இருந்துள்ளார். 

இதன்போது அங்கு சாலை வழியாக நடந்து வந்த மர்ம நபர், திடீரென டீகோவிடம் இருந்த அலைபேசியை பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகிய டீகோ, பின்னர் சுதாரித்து மர்ம நபரை துரத்தி சென்றார். 

எனது போனை திருடன் திருடிவிட்டான் என்று ஸ்பானிய மொழியில் கத்திகொண்டே ஓடிய நிலையில், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மர்ம நபரை பிடித்து போனை மீட்டுள்ளார். தனது அலைபேசி கிடைத்ததும் பரிதாபம் பார்த்து மர்ம நபர் மீது காவல் துறையினரிடம் புகார் அளிக்காமல் விட்டுவிட்டார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Argentina Reporter Mobile Snatching video


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal