அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு!...அதிபர் ஜோ பைடன் உத்தரவு! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் குறிப்பாக பள்ளிகளில் அதிகம் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டு மக்கள்  நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசிடம் கடந்த 2023-ம் ஆண்டில் அமெரிக்காவில் துப்பாக்கி சட்டத்தை கவனிக்கும் துறை  ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், அதிகரித்து வரும் துப்பாக்கி அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தில் இன்று கையெழுத்திடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

An end to gun culture in America President Joe Biden orders


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->