கண்டம் விட்டு கண்டம் பாயும் 'மினிட் மேன் - 3' ஏவுகணையை வெற்றிகரமாக நடத்திய அமெரிக்கா..!
America successfully launches intercontinental ballistic missile Minute Man 3
கண்டம் விட்டு கண்டம் பாயும் 'மினிட் மேன் - 3' ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
ரஸ்யா, சீனா போன்ற நாடுகள் அணுஆயுத சோதனையை நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவும் அணுஆயுத சோதனையை நடத்தும் என அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தங்கள் நாடும் அணுஆயுத சோதனையை நடத்த வேண்டும் என சமூபத்தில் உத்தரவிட்டார். அத்துடன், தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்ய வேண்டியது அவசியம் என அமெரிக்க ராணுவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
அதாவது, உலக நாடுகள் பலவும் தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்து வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் அமைதியாக இருக்க முடியாது என்று குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்கா சோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் 'மினிட் மேன் - 3' ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
அதாவது, அணு ஆயுதம் இன்றி இந்த சோதனை நடந்ததாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் படைத்தளத்தில் இருந்து மார்ஷல் தீவுகளில் உள்ள இலக்கை நோக்கி ஏவப்பட்டுள்ளது. இது வழக்கமாக நடத்தப்படும் சோதனை என்றும், முன்பே திட்டமிடப்பட்டது எனவும் அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த சோதனைக்கும், அதிபர் டிரம்பின் உத்தரவுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளது.
English Summary
America successfully launches intercontinental ballistic missile Minute Man 3