NGC 2525 சூப்பர்நோவா நட்சத்திரம் வெடித்து சிதறும் காட்சி.. நாசா வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள விண்வெளி நிறுவனமான நாசா, ஹப்பிள் தொலைநோக்கி லென்ஸ் மூலமாக வெடிக்கும் நட்சத்திரத்தின் அதிசய விடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளது. மேலும், இது குறித்த வீடியோவில் நொடிப்பொழுதிற்குள் வெடிக்கும் நட்சத்திரம், கண்களில் இருந்து மறையும் காட்சிகள் அடங்கியுள்ளது. 

மேலும், இவை ஒரு வருடமாக காத்திருந்து பதிவு செய்யப்பட்டது என்றும் நாசா தகவல் தெரிவித்துள்ளது. நட்சத்திரத்தினை சுற்றியுள்ள வான் பொருள் பிரகாசமாக ஜொலித்து, சிறிய புள்ளி போல வெடித்து சிதறி மறைகிறது. 

இப்போது வெளியடிப்பட்டுள்ள வீடியோ தெற்கு விண்மீன் தொகுப்பான பூப்பிஸில் 7 கோடி ஒளியாண்டு தொலைவில் அமைந்துள்ள சுலர்வின்மீன் NGC 2525 என்றும், இந்த நட்சத்திரம் பால்வீதி அண்டத்தின் அரை விட்டம் அளவில் உள்ளதாகவும், இந்த நட்சத்திரத்தை வானவியலார் வில்லியம் ஹெர்ஷல் 1791 ஆம் வருடம் கண்டறிந்து சுழல் நெபுலா என்றும் பெயரிட்டதாக தெரிவிப்பட்டுள்ளது.

இந்த வடிக்கும் நட்சத்திரம் "Type LA" சூப்பர்நோவா என்றும், வெள்ளை அண்டை நட்சத்திரத்தின் பெரிய அளவிலான பொருட்களை சேகரித்து, அதன் விளைவாக இது தோன்றியுள்ளது என்றும் தெரியவருகிறது. சூப்பர்நோவா நட்சத்திரங்கள் பில்லியன் கணக்கான ஒளியாண்டு தொலைவில் இருக்கிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America NASA NGC 2525 Star Supernova video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->