மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்., உறுப்புகளை எடுக்க எத்தனித்த போது திடீர் சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் பாஸ்டர் லிஸ்ட்டேரியா என்ற பாக்டீரியா தொற்றால் ரியான் மார்லோ என்ற நபர் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 15 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. 

நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமான நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்  இதனைத் தொடர்ந்து, அவரது மனைவி சோஷியல் மீடியாவில் கணவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதை கண்ட அவரது நண்பர்கள் உடனடியாக உறுப்பு தானம் செய்யுங்கள் என்று பலரும் அவருக்கு தெரிவித்ததை தொடர்ந்து, அவர் உறுப்பு தானம் செய்யும் முயற்சிக்காக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். 

அவர்கள் அவரது உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட முடிவு செய்த முடிவு செய்தனர். பின்னர், அவரது உறவினர் இறுதியாக பார்த்துவிட வேண்டும் என்று சென்றுள்ளனர். அப்பொழுது மரணப்படுக்கையில் இருந்த ரியான் முன்பாக அவருடைய குழந்தைகள் பேசிய வீடியோ காட்டப்பட்டது. இதை தொடர்ந்து ரியானின் கால்கள் அதிர்ந்தது.

உறுப்புகளை அகற்ற சில நிமிடங்கள் இருந்த நிலையில் அவரது உடலில் இருந்து ஏற்பட்ட அசைவால் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, கணவரின் உடலை மீண்டும் பரிசோதிக்க மனைவி மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டார். அவரது மூளைக்கு ரத்த ஓட்டம் செல்வது ஸ்கேன் செய்த போது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு இதயத்துடிப்பு அதிகரித்து காணப்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Men have sense During operate To donate organs


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->