சிறுவன் முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை... அதிர்ச்சி திருப்பமாக தாய் பரபரப்பு கைது.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பகுதியை சார்ந்த பெண்மணி சமந்தா மோரேனோ ரோட்ரிக்ஸ் (Samantha Moreno Rodriguez). இவரது வயது 35. இவரது கணவரின் பெயர் ரோட்ரிக்ஸ் (Rodriguez). இந்த தம்பதிகளுக்கு லியாம் ஹஸ்டட் (Liam Husted) என்ற மகன் இருக்கிறார். 

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக சிறுவன் மாயமாகியிருந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் துறையினர், மே 28 ஆம் தேதி சிறுவனின் உடலை நெவேடா (Nevada) பகுதியில் சடலமாக மீட்டனர். 

ஆனால், சிறுவனின் உடலில் அடையாளங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு இருந்ததால், சிறுவன் யார்? என்ற விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து, காவல் துறையினர் தொழில்நுட்பம் மூலமாக சிறுவனின் முகத்தை சித்தரித்து செய்தி ஊடகங்களில் வெளியிட்டனர்.

இதனையடுத்து, சிறுவன் மந்தா மோரேனோ ரோட்ரிக்ஸ் - ரோட்ரிக்ஸ் தம்பதியின் மகன் லியாம் என்பது உறுதியானது. விசாரணையில் முதலில் எந்த விதமான முன்னேற்றமும் கிடைக்காத நிலையில், சிறுவனின் தாயார் தனது மகனை கொலை செய்த அதிர்ச்சி தகவல் காவல் துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிறுவனின் கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறுவன் எழுதியது போல தாய் கடிதம் ஒன்றை எழுதி வைத்ததன் பேரில் நடந்த விசாரணையில் சிறுவனின் தாயார் சிறுவனை கொலை செய்தது உறுதியானதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America California Mother Kills Son Police Investigation 9 June 2021


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal