7 கிலோ புற்றுக்கட்டியை தொப்பையாக கருதிய பெண்மணி.. கடவுளாக மருத்துவர்கள்.! விழிப்புணர்வுக்கு பெண் செய்த செயல்.!! - Seithipunal
Seithipunal


பெண்மணியின் வயிற்றில் புற்றுநோய்கட்டி ஏற்பட, அதனை தொப்பை என அலட்சியமாக நினைக்க, இறுதியில் பெண்மணியின் வயிற்றில் இருந்து 7 கிலோ புற்றுநோய்கட்டி அகற்றப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணம் டல்லாஸ் (Dallas) நகரை சார்ந்தவர் அமண்டா ஷோல்ட்ஸ் (Amanda Shoultz) வயது 29. இவர் நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், திடீரென வயிறு வீக்கமாக தொடங்கியுள்ளது. தனது உடல் எடை அதிகரித்துவிட்டதை வயிறு பெரிதாகி தொப்பை போல காண்பிக்கிறது என அமண்டா முதலில் நினைத்துள்ளார். 

இதனையடுத்து, தொப்பையை குறைக்கும் பொருட்டு அதிக வேலைகளை செயல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவற்றில் கவனம் செலுத்தியுள்ளார். ஆனால், பலன் ஏதும் இல்லை. உடல் எடை சற்று குறைந்தாலும், தொப்பை போன்று இருந்தது குறைந்ததாக தெரியவில்லை. உடல் எடையை குறைக்க மருத்துவரிடமும் ஆலோசனை கேட்டுள்ளார். அவரும் சில ஆலோசனை வழங்கி இருக்கிறார். 

எதுவும் பலனளிக்கவில்லை என்று கருதிய அமண்டா தனது வாயை கட்டி பார்க்கலாம் என்று நினைத்து, தனக்கு பிடித்த உணவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, டயட் மேற்கொண்டு இருக்கிறார். அதனாலும் எந்த பலனும் இல்லை. இறுதியாக அங்குள்ள வாஸ்குலர் மருத்துவமனைக்கு (Vascular Hospital) சென்ற அமண்டா விஷயத்தை கூற, மருத்துவர்கள் பெண்மணியின் வயிற்றை பார்த்துவிட்டு ஒன்று இது கர்ப்பமாக இருக்க வேண்டும் அல்லது புற்றுநோய் கட்டியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

மருத்துவ பரிசோதனைகளும் நடைபெற்ற நிலையில், இறுதியாக அவரது வயிற்றில் 17 பவுண்ட் (7.711 கிலோ) எடையுள்ள 33 செ.மீ அளவிலான புற்றுநோய் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வயிறு வளர்ச்சி இன்று வரை சரியாகவில்லை என்பதால், வாஸ்குலர் மருத்துவமனைக்கு சென்று இரைப்பை குடல் நிபுணரிடம் சென்று விஷயத்தை கூறி மேற்கொண்ட பரிசோதனையில் இது உறுதியாகியுள்ளது.

பொதுவாக புற்றுநோய் கட்டிகள் இருந்தால் உடலளவில் ஏற்படும் மாற்றம் மற்றும் வலி அதனை உணர்த்தும் நிலையில், அமண்டாவுக்கு சிறுநீரகம் மற்றும் அட்ரீனல் சுரப்பியைச் சுற்றி புற்றுநோய் கட்டி ஏற்பட்டும் வலி, அறிகுறி ஏதும் தெரியவில்லை. இதனையடுத்து, இறுதி மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் நடத்தப்பட்டு, கடந்த செப். மாதம் 27 ஆம் தேதி அமண்டாவுக்கு சுமார் 2 மணிநேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, புற்றுநோயைக்கட்டி மருத்துவர்களால் அகற்றப்பட்டது. 

கடந்த வருடத்தில் புற்றுநோய் கட்டியுடன் கர்ப்பிணி பெண்மணி போல தோற்றமளித்த அமண்டா, தனது உடலில் இருந்த 7 கிலோ கட்டி அகற்றப்பட்டு இளம் பெண்மணியாக தோற்றமளிக்கிறார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் பிற விபரங்களை அவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததன் வாயிலாக, இவ்விஷயம் வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது. புற்றுநோய் மேலும் ஏற்படாமல் இருக்க மருத்துவர்களுக்கு அமண்டாவின் வலது சிறுநீரகம் மற்றும் அட்ரீனல் சுரப்பியின் ஒரு பகுதியையும் அகற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அமண்டா தெரிவிக்கையில், " மற்றவர்கள், குறிப்பாக பெண்கள், தங்கள் சொந்த உடல்நலன் குறித்த முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். எனது உடலில் எதோ மாற்றம் நிகழ்கிறது என்பது எனக்கு தெரிந்து இருந்தாலும், அதனை வேறொரு பிரச்சனையாக எண்ணியதே பெரும் தவறு. அதனால் தான் 7 கிலோ அளவிலான கட்டி உருவானது. நமக்காக யாரும் போராடத் தேவையில்லை, எனவே உங்களுக்காக நீங்கள் போராடுங்கள், உடலை பராமரிக்கும் நலனை தெரிந்துகொள்ளுங்கள்" என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amanda Shoultz of Dallas Texas America Woman 7 KG Cancerous Tumor Removed by Doctors


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->