அலாஸ்கா இயற்கை சீற்றம்! நிலச்சரிவால் 100 அடிக்கு உயர்ந்த சுனாமி அலைகள்...!
Alaska natural disaster Tsunami waves over 100 feet high due landslide
அமெரிக்கா நாட்டின் அலாஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு சுத்துவட்டாரத்தில் ''ட்ரேசி ஆர்ம்'' என்ற பகுதி இருக்கிறது.அங்கு மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் அதிகமாக காணப்படும்.இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு சற்றும் எதிர்பாராதவாறு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால்,மலையின் ஒரு பெரிய பகுதி திடீரென கடலில் சரிந்து விழுந்தது. இதனால் சுமார் 100 அடி உயரத்துக்கு பிரம்மாண்டமான சுனாமி அலைகள் உருவாகியாது.இந்த சுனாமி அலைகள் கடற்கரை பகுதிகளை மூழ்கடிக்கும் அளவிற்கு இருந்தது.
இந்த நிகழ்வு ஒரு அரிய மற்றும் பயங்கரமான புவியியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.இந்த நிலச்சரிவு ஏற்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கானது முதல் ஆயிரக்கணக்கான சிறிய நில அதிர்வுகள் ஏற்பட்டதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 1,000 கி.மீ தொலைவிலுள்ள நில அதிர்வு நிலையங்களாலும் பதிவு செய்யப்பட்டது.இதனால் அங்குலல்ல மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இது தற்போது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Alaska natural disaster Tsunami waves over 100 feet high due landslide