கணினி அறிவியலின் தந்தை பிறந்த தினம் இன்று.! - Seithipunal
Seithipunal


அலன் மாத்திசன் டூரிங் :

தற்காலக் கோட்பாட்டு கணினி அறிவியலின் தந்தை அலன் மாத்திசன் டூரிங் 1912ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.

இவரது ஆட்டோமேட்டிக் கம்ப்யூட்டிங் என்ஜின்தான் மின்னணு நிரல் சேமிப்புக் கணிப்பொறிகளுக்கான முதல் வடிவமைப்பு.

இவர் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் மூலம் செயற்கை அறிவு கொண்ட இயந்திரங்களை உருவாக்க முடியும் என்று கூறினார். அதற்கான சில விதிமுறைகளை வகுத்தார். இது டூரிங் டெஸ்ட் எனக் குறிப்பிடப்படுகிறது.

நவீன கணினி, சங்கேதவியல் உள்ளிட்ட பல துறைகளுக்கு அடித்தளமிட்ட இவர் 1954ஆம் ஆண்டு மறைந்தார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் :

அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களின் சேவையை சிறப்பாக செய்து வருகின்றனர். சேவையானது நல்லொழுக்கம் கொண்டதாக இருக்கிறது. சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23ஆம் தேதி பொதுச்சேவை தினமாக அறிவித்தது.

சேவை செய்யும் பண்பானது, நல்லொழுக்கத்தின் அடையாளமாக இருக்கிறது. பொதுச்சேவையை ஊக்குவிக்கவும், சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கவும் ஐ.நா. பொதுச்சபை இத்தினத்தை கொண்டாடி வருகிறது.

சர்வதேச கைம்பெண்கள் தினம் :

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விதவைப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் இன்னல்கள் குறித்து ஐ.நா.சபை விவாதித்து ஜூன் 23ஆம் தேதியை சர்வதேச விதவைகள் தினமாக 2010ஆம் ஆண்டில் அறிவித்தது.

உலகம் முழுவதும் ஆதரவின்றி தவிக்கும் கைம்பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

alan mathison turing birthday 2021


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal