#சூடான் : "72 மணி நேர போர் நிறுத்தம் உண்மை இல்லை"... தண்ணீர், மின்சாரமின்றி தவிக்கும் மக்கள்..! - Seithipunal
Seithipunal


வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் தலைநகர் கார்ட்டூம் உட்பட பெரும்பாலான இடங்களில் தாக்குதல் நடைபெற்று வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் கடந்த 6 நாட்களாக நடந்து வரும் தீவிர தாக்குதலில் 413 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3551 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் மக்களை சூடானிலிருந்து மீட்க தூதுரங்கன் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் துணை ராணுவ படைகள் தொடர்ந்து சூடான் தலைநகரப் பகுதிகளில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து 72 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தம் உண்மை இல்லை என்றும், நகரங்களில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ராணுவப்படைகள் துண்டித்துள்ளதாகவும், இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் சூடான் வாழ் தமிழர்கள் தூதரகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான ஆதாரங்களுடன் தூதரக அதிகாரிகள் தமிழர்களுடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

72 hr war halting is not true as people affects without water and power in sudan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->