அக்ஷய திரிதி நாளின் சிறப்புகள்! வாங்க பார்க்கலாம்...  - Seithipunal
Seithipunal


தமிழ் மாதங்களில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதத்தில் வருகின்ற மூன்றாவது வளர்பிறை அக்ஷய திருதியாக கொண்டாடப்படுகிறது. 

* ஆங்கில மாதத்தின் படி ஏப்ரல் அல்லது மே மாதங்களில் வரும் இந்த நாளில் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி தேவியாரையும் பெருமாளையும் வணங்குவதால் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். 

* 12 தமிழ் மாதங்களிலும் திருதியை திதி வந்தாலும் சித்திரை மாதத்தில் மட்டும் அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது. பல்வேறு சிறப்பான விஷயங்கள் இந்த நாளில் நடைபெறுவதால் மங்களகரமான நாள் என கருதப்படுகிறது. 

* இந்த சிறப்பான நாளில் தான் திருமால் அவரது ஆறாவது அவதாரமான பரசுராமன் அவதாரத்தை எடுத்தார். இந்த நாளில் உணவு தானியங்களை வழங்கக்கூடிய தெய்வமாக அன்னபூரணி தேவி அவதரித்தார். 

* கிருஷ்ண பெருமாள் அவரது நண்பரான கொலை குசேலருக்கு அளவில்லாத செல்வங்களை அக்ஷய திருதியை நாளன்று அள்ளிக் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. கங்கை நதி அக்ஷய திருதியை அன்றுதான் பூமிக்கு வந்ததாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இந்த நாளில் புனித நீராடுவது மிகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது. குபேரர், மகாலட்சுமி தேவியாரை வழிபட்டு செல்வத்தை அதிகமாக நிர்வகிக்கும் பொறுப்பை இந்த நாளில் பெற்றதாகவும் புராணங்கள் தெரிவிக்கிறது. 

* அக்ஷய திருதியை நாளன்று பலரும் தங்களது இல்லங்களில் செல்வங்கள் நிலைத்திருக்க வீட்டில் பூஜை செய்தல், தங்க ஆபரணங்கள் வாங்குவது போன்ற சிறப்பு காரியங்களில் ஈடுபடுவர். 

* பெருமாளையும் மகாலட்சுமி தேவியையும் வழிபடுவது வாழ்க்கையில் வளத்தையும் மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். இந்த நாளில் ஒரு செயலை செய்தால் அந்த செயல் வளர்ந்து கொண்டே இருக்கும். 

* அதனால் தான் இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்குகிறோம். அதுமட்டுமல்லாது பலருக்கு தான தர்மங்கள் வழங்குவதும் அன்றைய நாளில் சிறப்பு வாய்ந்ததாக அமையும். அட்சய திருதியை நாளன்று நாம் தானமாக கொடுக்கும் பொருளும் நாம் வாங்கும் பொருளும் நம்முடைய உயர்வுக்கு அடையாளமாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Akshaya Tritiya Highlights  tamil


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->