படகு கவிழ்ந்து 38 பேர் பலி; 100 பேர் மாயம்.! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து நூற்றுக்கணக்கான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடல்வழியாக பயணிகள் படகு ஒன்று வந்தது. இந்தப் படகு மத்திய கிழக்கு நாடான ஏமன் நாட்டின் ஏடன் பகுதிக்கு அருகே நேற்று வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென வந்த கடல் சீற்றத்தால் நிலைதடுமாறி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100 பேர் கடலில் மாயமாகியுள்ளனர். இந்த விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்த உள்ளூவர் மீனவர்கள் உடனே விரைந்து கடலில் தத்தளித்த 78 அகதிகளை மீட்டனர். இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விவகாரம் குறித்து ஐ.நா வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகவே வேற்று தேசம் நோக்கி பயணிக்கும் அகதிகள் கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஐ.நா வின் அறிக்கைபடி கடந்த ஒரு வருடத்தில் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் நாட்டுக்கு சுமார் 97,000 அகதிகள் வந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

38 migarants died and 100 peoples missing in eman boat accident


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->