நேபாளத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்கள்.. 3 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்களில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து நேபாள நாட்டின் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாள நாட்டின் மேற்கே நேற்று இரவு 9:07 மணியளவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் இரவு 9:56 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் இன்று அதிகாலை 2:12 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகளில் 6.6 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து 3 பேர் இடுப்பாடுகள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் இந்தியாவின் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 continue earthquake in Nepal 3 peoples death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->