நைஜீரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆயுதக் குழுவினர் தாக்குதல்; 200 பேர் உயிரிழப்பு; பலரின் கைகளை கட்டி வைத்து சுட்டுக்கொன்ற கொடூரம்..! - Seithipunal
Seithipunal


நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 03-ஆம் தேதி ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் இரண்டு கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் சுமார் 200 பேர் வரை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 03 (செவ்வாய்க்கிழமை) இரவு, குவாரா மாநிலத்தின் வோரோ மற்றும் நுகு ஆகிய இரண்டு தொலைதூர கிராமங்களுக்குள் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த பயங்கரவாதிகள், கிராம மக்களைச் சூழ்ந்து கொண்டு, பலரின் கைகளைக் கட்டிப் போட்டு சுட்டுக் கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.  அத்துடன், பல வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்து சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய லகுராவா என்ற ஆயுதக் குழுவினர் நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிராக, நைஜீரிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் ஏற்பட்ட விரக்தியில், இது போன்ற கோழைத்தனமான தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியுள்ளதாகக் குவாரா மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

200 killed in terrorist attack in Nigeria


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->