சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து - 20 யாத்ரீகர்கள் பலி, 29 பேர் காயம்..! - Seithipunal
Seithipunal


சவுதி அரேபியாவில் பேருந்து பாலத்தில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 20 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு மாகாணமான ஆசிரில் 50க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று புனித நகரமான மெக்காவிற்கு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதையடுத்து பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் சாலையில், பேருந்து பிரேக் செயலிழந்ததால் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பேருந்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு மதீனா அருகே கனரக வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் 35 வெளிநாட்டினர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 pilgrims killed and 29 injured in Saudi Arabia bus crash


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->