மே-20ம் தேதி ரெட் அலர்ட்.. யாரும் வராதீங்க.. ஆட்சியர் வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்திற்கு வரும் மே 20ம் இதுவரை சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை காண ஆரஞ்சு கலர் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் இருபதாம் தேதி மிக மிக கனமழைக்கான சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மலைகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்திற்கு சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்து. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் அடுத்த மூன்று நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும். 

சில பயணிகளின் பாதுகாப்பை கருதிய இந்த அறிவுரை வழங்கப்படுகிறது. அதனையும் மீறி வருவோர்களை பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 3500 முன்கள பணியாளர்கள், 100 ஜேசிபி இயந்திரங்கள் மணல் முட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியை தவிர மற்ற பகுதிகளில் இருக்கும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiri collector request donot come to Ooty


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->