தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருளில் மூழ்கிய வங்காளதேசம்.! 13 கோடி பேர் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


வங்காளதேசத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. தலைநகர் டாக்கா உள்ளிட்டு பல முக்கிய நகரங்களில் நேற்று பிற்பகல் முதல் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சுமார் 13 கோடி பேர் மின்சாரம் இன்றி தவித்துள்ளனர்.

நாட்டின் 80 சதவீத பகுதிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முக்கிய ஆடைத் துறை மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை சுமார் 10 மணி நேரம் நிறுத்தியது.

மேலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்விநியோகம் தடைபட்டுள்ளது என்றும், இதை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அந்நாட்டு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரினால் தொடர்ந்து உலகளாவிய எரிசக்தி விலை உயர்ந்ததன் விளைவாக வங்காளதேசம் கடந்த சில நாட்களாக பெரும் மின் நெருக்கடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 crore people affected as power cut in Bangladesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->