சீனாவில் சோகம்: சோதனை ரயில் மோதி ஊழியர்கள் 11 பேர் உயிரிழப்பு; 02 பேர் படுகாயம்..!
11 workers killed in China test train crash
உலகின் மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்புகளை கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. அந்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் ரயில் விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றமை தொடர்கதையாகவுள்ளது.
இந்நிலையில், யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் என்ற இடத்தில் இன்று (நவம்பர் 27)ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த ஊழியர்கள் மீது சோதனை ரயில்மோதியுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 02 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்ததும் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 55 பேர் உயிரிழந்த நிலையில், அடுத்ததாக ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்தது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
11 workers killed in China test train crash