பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து - 11 பேர் பலி, 58 பேர் மீட்பு - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் மேற்கு கடற்கரை துறைமுகமான இந்திரகிரி ஹிலிர் பகுதியிலிருந்து ஈத் அல்-பித்ர் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக  ஈவ்லின் கலிஸ்டா என்ற படகில் சுமார் 80 பயணிகளுடன் ரியாவ் தீவிற்கு சென்று கொண்டிருந்தது. 

இந்நிலையில் புளாவ் புருங் பகுதிக்கு அருகே படகு சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து தகவலறிந்து விரைந்த கடலோர காவல் படையினர், பெண்கள், சிறுவர்கள் என கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 58 பேரை மீட்டனர்.

மேலும் இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சிறிய படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி சென்றதால் படகு கவிழ்த்ததாக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 died and 58 rescued as boat capsized in Indonesia


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->