புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகன மழைக்கு வாய்ப்பு! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு பருவமழை தமிழக முழுவதும் தீவிரமடைந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் வர முதல் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் அரபிக் கடலை நோக்கி தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை முதல் அதிக கன மழை பெய்ய தொடங்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையை நோக்கி நகர்வதால் அடுத்த ஏழு நாட்களுக்கு தென் தமிழக முழுவதும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomorrow more rain in Puducherry and Delta districts


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->