'வெயிலுக்கு இடையில் மழை சிக்னல்'...! - மேற்கு தொடர்ச்சி மலை, ராமநாதபுரத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு...!
Rain signal amid sunshine Chance rain today Ramanathapuram Western Ghats
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, தமிழகத்தின் பல பகுதிகளில் வானிலை மாறுபாடுகளுடன் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னார் வளைகுடா வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக சுமார் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருவதால், வானிலை அமைப்பில் மாற்றங்கள் உருவாகியுள்ளன.

இதன் தாக்கத்தால், ஏப்ரல் 16 முதல் 22 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா பகுதிகளின் கடலோரங்கள், ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, உள் தமிழக மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர பகுதிகளில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லாதபோதிலும், அதிக ஈரப்பதத்துடன் கூடிய வெப்பம் காரணமாக அசௌகரியம் ஏற்படும் சூழல் நிலவும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரைவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பத்துடன் கூடிய ஈரப்பதம் காரணமாக பொதுமக்களுக்கு சோர்வு மற்றும் அசௌகரியம் ஏற்படும் நிலை உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Rain signal amid sunshine Chance rain today Ramanathapuram Western Ghats