10 மாவட்டத்தில் வெளுக்க போகும் மழை - வானிலை மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் உள்ளிட்டவற்றின் தாக்கத்தினால் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு தற்போது மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தென்கிழக்கு அரபி கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவுப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பத்து மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rain in ten districts at tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->