தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை வீசும்.. "ஆரஞ்சு‌ அலர்ட்" விடுத்த வானிலை மையம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை வீசும் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மாநில ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை | நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்); நிலக்கோட்டை (திண்டுக்கல்) 5 செ.மீ

அதிகபட்ச வெப்பநிலை:

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை விட 2" – 4" செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை | பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.

வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசியது.

அதிக பட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 44.0" செல்சியஸ் (இயல்பை விட +7.2° செல்சியஸ் | அதிகம்) பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 43.7° செல்சியஸ், ஈரோட்டில் 43.6° செல்சியஸ், திருச்சியில் 43.1" செல்சியஸ், திருத்தணியில் 42.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் 10 இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 40" – 42' செல்சியஸ் பதிவாகியுள்ளது. தர்மபுரி & சேலத்தில் 41.5* செல்சியஸ், மதுரை (நகரம் & விமான நிலையம்) மற்றும் திருப்பத்தூரில் 41.4* செல்சியஸ், நாமக்கல் & தஞ்சாவூரில் 41.0" செல்சியஸ், சென்னை மீனம்பாக்கத்தில் 40.7° செல்சியஸ், கடலூரில் 40.2° செல்சியஸ் மற்றும் பாளையம்கோட்டையில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39 - 40 டிகிரி செல்சியஸ், பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36-40 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 25° –30‌ டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 40.7° செல்சியஸ் (+.3.5° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 39.0° செல்சியஸ் (+2.9° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

 

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக

02.05.2024: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 | கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

03.05.2024 முதல் 06.05.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07.05.2024 மற்றும் 08.05.2024:

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

02.05.2024 முதல் 06.05.2024 வரை:

அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2" செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

02.05.2024 முதல் 06.05.2024 வரை:

அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 02.05.2024 முதல் 04.05.2024 வரை: வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3"-5" செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.

02.05.2024 முதல் 04.05.2024 வரை:

அடுத்த 3 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 41°–44" செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39–41* செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37°–40° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:

02.05.2024 முதல் 06.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும்| கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

02.05.2024 & 03.05.2024:

வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

04.05.2024 முதல் 06.05.2024 வரை:

வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDI issue orange alert for heat waves in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->