கொட்டித் தீர்க்க போகுது கனமழை! ரெட் அலர்ட்,ஆரஞ்சு அலர்ட் விடுத்த மாவட்டங்கள் என்னென்ன?
Heavy rains are about to pour Which districts have issued red and orange alerts
இன்று மதியம், தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் 'அமுதா' அவர்கள் ஊடக நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது," 8 நாட்கள் முன்னதாக தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

மத்திய கிழக்கு அரபி கடலில் உருவான காற்றழத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.தூத்துக்குடி, பாம்பனில் 3ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழை கொட்டும். இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவையில் 27ஆம் தேதி மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்யும்.கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது இந்தாண்டு மே வரையிலான காலத்தில் 92 % கூடுதலாக மழைப்பொழிவு பதிவு" எனத் தெரிவித்துள்ளார்.
ஆகவே மக்கள் பாதிப்பை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
English Summary
Heavy rains are about to pour Which districts have issued red and orange alerts