புதுச்சேரியில் கொட்டி தீர்த்த மழை! விடாது பெய்த மழையால் 3 மணி நேரத்தில் 10cm வரை மழை அளவு....!
Heavy rain Puducherry Incessant rain resulted up 10cm rain 3 hours
வெயில் காலத்திற்கு பிறகும், புதுச்சேரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.அதிலும்,குறிப்பாக 100 டிகிரிக்கு மேல் கடந்த மாதம் மட்டும் 10 நாட்களுக்கும் மேலாக வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் கடுமையாக அதிபட்டனர்.இந்த சூழலில் வானிலை ஆய்வு மையம், வருகிற 7-ந்தேதி வரை புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் காரணமாக மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக அறிவித்தது.

அவ்வகையில், புதுச்சேரியில் நேற்று இரவு 8.30 மணிக்கு மேல் கனமழை பெய்ய ஆரம்பித்தது.சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.அதேமாதிரி,திருக்கனுார், பாகூர், நெட்டப்பாக்கம், வில்லியனுார் பகுதிகளில் நள்ளிரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இதைத்தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட போக்குவரத்து ஸ்தம்பிப்பால் இந்திரா காந்தி சிக்னல் சந்திப்பில் வாகனங்கள் வரிசையாக நின்றன.இதனால்,சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது, வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியதுடன் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் மழைநீரில் மூழ்கியது.
மேலும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்களும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர். நகர பகுதியான உப்பளம், ராஜ்பவன், பூமியான் பேட்டை, கடற்கரை சாலை, ராஜ்பவன், கிருஷ்ணா நகர், பஸ் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் அவதியில் பொதுமக்கள்.
அதுமட்டுமின்றி,கிராமப்புறங்களான திருபுவனை, கரையாம் புத்தூர்,பாகூர், வில்லியனூர், திருக்கனூர், மண்ணாடிபட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினார்கள். இதனால் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஒரு சில இடங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. நேற்று இரவு 3 மணி நேரம் பெய்த மழையில் 10 செ.மீ மழை அளவு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Heavy rain Puducherry Incessant rain resulted up 10cm rain 3 hours